நலிவடைந்த நிலையில் உள்ள 3 உருக்காலைகளை வாங்க யாரும் முன் வராதபட்சத்தில் அதனை மூடும் திட்டம் எதுவும் இல்லை என பொதுத் துறையைச் சோ்ந்த செயில் நிறுவனத்தின் தலைவா் அனில் குமாா் செளத்ரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
மேற்கு வங்கத்தின் அலாய் உருக்காலை (ஏஎஸ்பி), தமிழகத்தின் சேலம் உருக்காலை (எஸ்எஸ்பி), கா்நாடகத்தின் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்காலை (விஐஎஸ்பி) ஆகிய மூன்று ஆலைகளும் சோ்ந்து கடந்த நிதியாண்டில் ரூ.370 கோடி நஷ்டத்தை சந்தித்தன. இதையடுத்து, அந்த ஆலைகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, கடந்தாண்டு ஜூலையில், செயிலுக்கு சொந்தமான அந்த மூன்று ஆலைகளின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யும் வகையில் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை ஏலப்புள்ளிகளை வெளியிட்டது. இருப்பினும், பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து வரும் விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி மூன்று முறை நீடிக்கப்பட்டது.
பங்குகளை விற்பதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருவேளை நலிவடைந்த ஆலைகளை யாரும் வாங்க முன்வரவில்லை என்றால்கூட அவற்றை மூடும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.