பள்ளி மாணவி சுட்டுக் கொலை: தந்தையும் மாமன் மகனும் கைது

சனிக்கிழமையன்று, தன்யா சவுத்ரி, காரி கிராமத்தில் தனது மாமாவின் வீட்டுக்குத் தங்கச் சென்றார்
கோப்புப் படம்
கோப்புப் படம்

மீரட்டிலுள்ள சர்தானா பகுதியில் 19 வயதுச் சிறுமி மாமன் மகனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சிறுமியின் முறை மாமனான பிரசாந்த் சவுத்ரி (25), அவரது தந்தை தரம்வீர் (55) மற்றும் சிறுமியின் தந்தை ஜெயவிந்தர் (45) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

"சனிக்கிழமையன்று, தன்யா சவுத்ரி, காரி கிராமத்தில் தனது மாமாவின் வீட்டுக்குத் தங்கச் சென்றார், அங்கு அவர் காதலித்த வந்த நபரைச் சந்திப்பதை எதிர்த்தார் பிரசாந்த். தன்யா அவர் சொல்லியதைக் கேட்காமல் கிளம்பியதால் கோபமடைந்த பிரசாந்த், தனது துப்பாக்கியிலிருந்து மூன்று தோட்டாக்களால் சராமாரியாக சுட்டார். தான்யா சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்," என்றார் சர்தானா காவல் நிலையப் பொறுப்பாளர் பூபேந்திரா சவுத்ரி.

காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜாட் குடும்பத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தன்யா, தனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருந்தார், அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.

தன்யா கொல்லப்பட்ட பின்னர், யாரோ ஒரு நபர் சுட்டுக் கொன்றதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி குடும்பத்தினர் கொலையை மறைக்க முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், போலீஸார் வீட்டை அடைந்ததும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

"தன்யா சுட்டுக் கொல்லப்பட்ட அறையில் ரத்தக் கறைகளைத் துடைத்த பின்னரே, அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் கூறுகையில், ‘நாங்கள் அங்குச் சென்ற போது, ​​சுவர்களில் ரத்தம் இருப்பதைக் கண்டோம். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது’ என்று மீரட் கிராமப்புற போலீஸ் சூப்பிரிடென்டண்ட் அவினாஷ் பாண்டே கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com