என்ஆர்சிக்கு எதிராக பிகார் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி என தேஜஸ்வி கருத்து

பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் பிகார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
என்ஆர்சிக்கு எதிராக பிகார் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி என தேஜஸ்வி கருத்து


பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் பிகார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) எதிராக பிகார் சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு (என்பிஆர்) ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 2010-இல் வெளியிடப்பட்ட என்பிஆர் வடிவத்திலேயே அமல்படுத்தப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் தெரிவிக்கையில், "என்பிஆர் படிவங்களில் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை நீக்கக்கோரி மத்திய அரசுக்கு பிகார் அரசு கடிதம் எழுதியுள்ளது" என்றார். 

இந்நிலையில், தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், "குடியுரிமை விஷயத்தில் ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்தவர்கள் இன்றைக்கு பிகாரில் பின்வாங்க நேரிட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் என்ஆர்சி அமல்படுத்தப்படாது எனத் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் பிகார். இது அரசியலமைப்புக்குக் கிடைத்த வெற்றி. எங்களுக்கும், லாலு பிரசாத்துக்கும் ஆதரவு தெரிவித்த மக்களின் கனவை இன்று நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com