ஜூன் 1 முதல் சில்லறை இனிப்புகளுக்கும் காலாவதி தேதி!

சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளை எப்போது தயாரித்தது, எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? என்று இனிப்பு வகைகளை காட்சிப்படுத்தும் இடத்தில் எழுதிவைக்க வேண்டும்.
ஜூன் 1 முதல் சில்லறை இனிப்புகளுக்கும் காலாவதி தேதி!

சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளை எப்போது தயாரித்தது, எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? என்று இனிப்பு வகைகளை காட்சிப்படுத்தும் இடத்தில் எழுதிவைக்க வேண்டும் என இனிப்புக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய இனிப்புக் கடைகளில் பெட்டி அல்லது பைகளில் அடைக்கப்படாத சில்லறையில் விற்கப்படும் இனிப்புகளின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் குறிக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.

பழைய மற்றும் காலாவதியான இனிப்புகளை விற்பனை செய்வது சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவது குறித்து அதிகளவில் புகார்கள் வரத்தொடங்கியதை அடுத்து பொதுநலன் கருதி எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிமுறைகள், 2011 இன் படி, பெட்டிகளில் அடைக்கப்பட்ட இனிப்புகளுக்கு இந்த விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கும் இந்த விதிமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இனிப்புகளின் தயாரிப்புத் தன்மை மற்றும் நிலைமைகளைப் பொறுத்து காலாவதி தேதியை தீர்மானிக்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில்லரை இனிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் சிலர் இந்த நடைமுறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பால் கொண்டு தயாரிக்கப்படும் ரசகுல்லா, பாதாம் பால், ரசமலாய், ராஜ்பாக் போன்ற இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்ட இரண்டு நாள்களுக்குள் சாப்பிட வேண்டும். காலாவதியானால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வழிகாட்டுதல் குறிப்பு ஒன்றை எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com