ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: நிலை அறிக்கை கோரும் நீதிமன்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திகார் சிறை நிர்வாகத்துக்கு 

News image
Updated On :16 ஜனவரி 2020, 11:00 am

PTI


புது தில்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு திகார் சிறை நிர்வாகத்துக்கு  தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பது தொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்த நிலை அறிக்கையை திகார் சிறை நிர்வாகம் நாளைக்குள் அளிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை தில்லி அரசு இன்று நிராகரித்த நிலையில், அந்த மனுவை தில்லி ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். தற்போது முகேஷ் சிங்கின் கருணை மனு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.