தில்லியில் பனிமூட்டம்: ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு

பனிமூட்டம் காரணமாக தில்லியில் இருந்து 12 ரயில்கள் வியாழக்கிழமை பல மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் பனிமூட்டம்: ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு
Published on
Updated on
1 min read

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) காலை 'மோசமான வானிலை' என்ற பிரிவின் கீழ் காற்றின் தரம் பதிவு செய்யப்பட்டுள்ளது, தில்லியின் பல்வேறு பகுதிகளிலும், மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் லேசான மழை பெய்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை ஒன்பது டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளதாக ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் "அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை வரை இருக்கக்கூடும். பகல் நேரத்தில் எதிர்பார்க்கப்படும் ஆலங்கட்டி மழையுடன் வானம் பொதுவாக இடியுடன் கூடிய மேகமூட்டத்துடன் இருக்கும்’’ என்றார்.

பனிமூட்டம் காரணமாக தில்லியில் இருந்து 12 ரயில்கள் வியாழக்கிழமை பல மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை மையம் நடத்தும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு அறிக்கைப்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏ க்யூ ஐ - ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்) 245 ஆக பதிவாகியுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும், பரவலான மழைப்பொழிவு இருக்கும், மேலும் இது நாளை (வெள்ளிக்கிழமை) சற்று மோசமடையக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 119 ஆண்டுகளில் கடந்த செய்வாய்க்கிழமை மிக மிக அதிகமான குளிர் நாளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com