பள்ளியில் அலமாரி விழுந்து  7 வயது மாணவி பலி

உத்திரபிரதேசத்திலுள்ள சலாவுதின்பூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 ஆம் வகுப்பு மாணவி மீது மர அலமாரி விழுந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

உத்திரபிரதேசத்திலுள்ள சலாவுதின்பூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 ஆம் வகுப்பு மாணவி மீது மர அலமாரி விழுந்தது. சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. இந்தச் செய்தி அறிந்து கோபமடைந்த கிராமவாசிகள் ஆசிரியர்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். 

இறந்த சிறுமிக்கு ஏழு வயது என்றும் 2 ஆம் வகுப்பு மாணவி பாயல் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி முடிந்ததும், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை எடுக்க ஒரு ஆசிரியர் பாயலை அனுப்பியுள்ளார்.  பாயல் அலமாரியைத் திறக்க முயன்றாள், அந்த முயற்சியில் அவள் அதைத் தள்ளும்போது, அலமாரி அவள் மீது விழுந்து, அந்த இடத்திலேயே அவள் உயிரிழந்தாள்.

ஆசிரியர்கள் பாயலின் உடலை அகற்றி தரையில் இருந்த ரத்தத்தைத் துடைத்தனர்.

மாவட்ட நீதிபதி மற்றும் பிற அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று பெற்றோர்களையும் கிராம மக்களையும் சமாதானப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்திற்கு பின்னர் பள்ளி முதல்வரும், மூன்று ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com