சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது சிபிஐ 4 புதிய வழக்குகள்

பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது சிபிஐ 4 புதிய வழக்குகளை புதன்கிழமை பதிவு செய்துள்ளது.
சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது சிபிஐ 4 புதிய வழக்குகள்

மும்பையைச் சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ 4 புதிய வழக்குகளை புதன்கிழமை பதிவு செய்துள்ளது.

முன்னதாக, சோட்டா ராஜனுக்கு எதிராக மகாராஷ்டிர போலீஸார் பதிவு செய்திருந்த கொலை உள்ளிட்ட மூன்று வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் சோட்டா ராஜன் உள்பட 6 பேருக்கு கொலை முயற்சி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகிவிட்டதால், அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிர குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா ரூ.5 லட்சம் அபராதத்தையும் இவர்கள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது, தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com