மத்திய அரசு உருவாக்கியுள்ள கோட்சே ரசிகர் மன்றத்தின் வெளிப்பாடுதான் இது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு உருவாக்கியுள்ள கோட்சே ரசிகர் மன்றத்தின் வெளிப்பாடுதான் நாடு முழுவதும் அதிகரிக்கும் இந்த வெறுப்புக் குற்றங்கள் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மத்திய அரசு உருவாக்கியுள்ள கோட்சே ரசிகர் மன்றத்தின் வெளிப்பாடுதான் நாடு முழுவதும் அதிகரிக்கும் இந்த வெறுப்புக் குற்றங்கள் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் நடுவே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ சுட்டுரைப் பதிவில்,

"விஷமத்தனமான அரசியல் மற்றும் நாதுராம் கோட்சேவை புனிதப்படுத்துவதன் மூலம் இந்த அரசு உருவாக்கியுள்ள கோட்சே ரசிகர் மன்றத்தின் வெளிப்பாடுதான் நாடு முழுவதும் அதிகரிக்கும் இந்த வெறுப்புக் குற்றங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவிக்கையில்,

"மகாத்மா காந்தியைக் கொன்ற வெறுப்புணர்வுதான் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஜாமியாவில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமளிக்கிறது. ஆனால், கடந்த ஒரு மாதமாக கட்டமைக்கப்பட்டு வரும் வெறுப்புணர்வு சூழலின் விளைவுதான் இது.

பாஜக வெளியிடும் கருத்துகள்தான் இந்தச் சமூகத்துக்கு ஊக்கமளிக்கிறது. இது தில்லியை பிளவுபடுத்துவதற்கானச் செயல். இந்த அரசின் உயர்நிலையில் இருப்பவர்களால்தான் இது நடத்தப்படுகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com