மனைவியைக் கொன்றுவிட்டு குடிபோதையில் உளறிய கணவர் கைது
மனைவியைக் கொன்று அவரது உடலை படுக்கைக்குக் கீழே மறைத்து வைத்து அதன் மீது இரண்டு நாள்களாகப் படுத்து உறங்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மனைவியைக் கொன்று அவரது உடலை படுக்கைக்குக் கீழே மறைத்து வைத்து அதன் மீது இரண்டு நாள்களாகப் படுத்து உறங்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஷேர் சிங் அஹிர்வார் - ஆர்த்தி அஹிர்வார் தம்பதியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த சிலர், காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தகவல் கொடுத்துள்ளனர்.
அதில், தங்கள் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஷேர் சிங், பெரிய கத்தியை வாங்கிச் சென்றதாகவும், குடித்துவிட்டு சுயநினைவை இழந்த நிலையில், கொலை செய்வது குறித்து பேசியதாகவும் தகவல் கொடுத்துள்ளனர்.
திங்கள்கிழமை காலை, ஷேர் சிங் வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர், வீட்டுக்குள் நுழைந்ததும், மிகவும் துர்நாற்றம் அடித்ததை அறிந்தனர். அப்போதுதான், வீட்டின் படுக்கைக்கு கீழே, ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஷேர் சிங் குடித்துவிட்டு தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும், இதனால், அவர் தனது 10 வயது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததும், மகனை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டுக்கு வந்த போது, ஷேர் சிங் தனது மனைவியைக் கொன்றுவிட்டு உடலை படுக்கைக்குக் கீழே மறைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
உடனடியாக ஷேர் சிங்கை கைது செய்த காவல்துறையினர் ஆர்த்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...