போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் அழுத்தம்: மணிப்பூர் பெண் காவலர் வாக்குமூலம்

போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்கும்படி முதல்வர் பிரோன் சிங் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மணிப்பூர் மாநில பெண் காவலர் பிருந்தா நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் அழுத்தம்: மணிப்பூர் பெண் காவலர் வாக்குமூலம்
போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் அழுத்தம்: மணிப்பூர் பெண் காவலர் வாக்குமூலம்


குவகாத்தி: போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்கும்படி முதல்வர் பிரோன் சிங் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மணிப்பூர் மாநில பெண் காவலர் பிருந்தா நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்காரரான லுகோசெய் ஸூவோ-வை விடுதலை செய்யுமாறு அதிகாரிகள் மட்டத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து நீதிமன்றத்தில் பிருந்தா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளைப் பிடிப்பதில் பெரும்பங்காற்றிய பிருந்தா, 2018-ஆம் ஆண்டு லுகோசெய்யை அவருடைய 7 கூட்டாளிகளுடன் கைது செய்தார். அப்போது, லுகோசெய், மாவட்ட தனி அதிகாரக் குழுத் தலைவராக இருந்தார்.

லுகோசெய்யை பெயிலில் விடுவித்தது குறித்தும், அவரது கைது நடவடிக்கைக்காக முதல்வர் கோபித்துக் கொண்டது குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பிருந்தா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிருந்தா, தனக்கு மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

அந்தப் பிரமாணப் பத்திரத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர் லுகோசெய், முதல்வரின் மனைவி ஆலிஸ்-க்கு வேண்டியவர் என்பதால், அவரை கைது செய்தால் ஆலிஸ் கோபம் அடைவார் என்று தன்னை உயர் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து லுகோசெய்யை விடுவிக்க பல தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை நான் ஏற்காமல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்பப் பெறுமாறும் முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் வந்தது என்றும் பிரமாணப் பத்திரத்தில் பிருந்தா கூறியுள்ளார்.

இறுதியாக, பிருந்தாவையும், மற்ற காவல்துறை அதிகாரிகளையும் முதல்வர் தமது இல்லத்துக்கு அழைத்திருந்தார். இது பற்றியும் பிருந்தா முகநூலில் பதிவிட்டிருந்தார். அப்போது முதல்வர், இதற்காகத்தான் நான் உங்களுக்கு விருதுகள் அளித்தேனா? அலுவலக ரகசியம் என ஒன்று இருப்பதே தெரியாதா? என கேட்டார். மேலும், அனைவரையும் முதல்வர் கடுமையாக திட்டியதாகவும், சட்டப்படி வேலை செய்யும் எங்களை முதல்வர் திட்டுவது ஏன் என்று புரியவில்லை என்றும் முகநூலில் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com