கரோனா: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,53,750 ஆக உயர்வு

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,53,750 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,53,750 ஆக உயர்வு

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,53,750 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் கொவைட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சரியான சமயத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தீவிர மற்றும் படிப்படியான உத்திகளுடன் கூடிய, சிறந்த முன்முயற்சிகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தி வருவதன் பலனாக சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. இன்றைய நிலையில், நாட்டில்  சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,58,692 மட்டுமே. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து, 6,53,750 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் முன்னேற்றமளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இன்று அது, 2,95,058 ஆக உள்ளது. சிகிச்சை பெற்றுவரும், 3,58,692 பேருக்கும் மருத்துவமனைகள் அல்லது வீட்டுத் தனிமைப்படுத்துதலில் சிறப்பு மருத்துவ கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால்,கொவைட் தொற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. மத்திய அரசு தனது சிறப்பு நிபுணர்கள் குழுக்களை மாநிலங்களுக்கு அனுப்பி, தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களை ஆய்வு செய்து வருகின்றது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. பிகார் மாநிலத்தில் கொவைட் மேலாண்மை நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் வகையில் மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவில், இணைச் செயலர் லவ் அகர்வால் ( பொது சுகாதாரம்), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்; டாக்டர் எஸ்.கே.சிங், இயக்குநர், என்சிடிசி; டாக்டர் நீரஜ் நிக்சல், இணைப் பேராசிரியர்( மருந்தியல்), எய்ம்ஸ், புதுதில்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்தக் குழு நாளை பீகார் சென்றடையும். வீடு, வீடாகச் சென்று ஆய்வு, சுற்றளவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உரிய நேரத் தொடர்பு கண்டறிதல், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்காணிப்பு ஆகிய தரமான கவனிப்பு அணுகுமுறைகள் மூலமாக நோய்க் கட்டுப்பாட்டு உத்திகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தீவிரப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனைக் கட்டமைப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், குணமடைதல் உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 17,994 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 63 சதவீதமாக உள்ளது. ஐசிஎம்ஆரின் தற்போதைய சோதனை உத்தியின் படி, பதிவு பெற்ற அனைத்து மருத்துவர்களும் சோதனைக்குப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆர்டி-பிசிஆர் சோதனைகள், ரேபிட் ஆன்டிஜன் பாயிண்ட் ஆப் கேர் சோதனைகள், ட்ரூநேட், சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான பரிசோதனைகள் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை உயர காரணமாகும். கடந்த 24 மணி நேரத்தில், 3,61,024 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மொத்த மாதிரிகள் பரிசோதனை எண்ணிக்கை 1,34,33,742 ஆகும். இந்தியாவில் பத்து லட்சம்  பேருக்கு 9734.6 பேர்  வீதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com