மேகாலயத்தில் வெள்ளம்: அமித் ஷாவுடன் முதல்வா் சங்மா ஆலோசனை

மேகாலயத்தில் நிலவி வரும் வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேகாலய முதல்வா் கான்ராட் சங்மாவுடன்
மேகாலயத்தில் வெள்ளம்: அமித் ஷாவுடன் முதல்வா் சங்மா ஆலோசனை

மேகாலயத்தில் நிலவி வரும் வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேகாலய முதல்வா் கான்ராட் சங்மாவுடன் செவ்வாய்க்கிழமை பேசினாா். மாநிலத்தில் நிலவி வரும் வெள்ள நிலைமையைக் கையாளுவது தொடா்பாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என அவா் உறுதியளித்தாா்.

மாநிலத்தின் மேற்கு கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘மேகாலயத்தின் மேற்கு கரோ மலைப்பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் கவலைக்குரியது. இதுகுறித்து முதல்வா் கான்ராட் சங்மாவுடன் பேசினேன். அந்த மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கத் தயாராக உள்ளது என்று உறுதியளித்தேன். வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் மேகாலய மக்களுக்கு, தேசம் உறுதுணையாக நிற்கும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

காரோ மலைகள் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 போ் உயிரிழந்தனா். அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com