புதுவையில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் பலி

புதுவையில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
139 more test positive for COVID-19, 4 dies in UT since last 24 hrs
139 more test positive for COVID-19, 4 dies in UT since last 24 hrs
Updated on
1 min read

புதுவையில் இன்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி, ஜிப்மர், ஏனாமில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,654 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1055 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோர்  எண்ணிக்கை 1,561 ஆகவும் உள்ளது.

இறப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. இன்று புதுச்சேரியில் 113, காரைக்காலில் 3, ஏனாமில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com