

மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 8,232 காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 1,825 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா பாதித்த 6,314 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 93 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது முதல் நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிக பாதிப்புடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிரத்தில் முன்களப் பணியாளர்களான காவல்துறையினருக்கு அதிகளவில் கரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதுவரை 8,232 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், 861 பேர் உயர் அதகாரிகள் என்பதும், 7371 காவலர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் தற்போது 1825 காவல்துறையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.