திப்புசுல்தான் குறித்த பாடப்பகுதியை நீக்கிய கர்நாடக அரசு: கிளம்பும் புதிய சர்ச்சை

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடப்பகுதியை கர்நாடக அரசு நீக்கியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திப்புசுல்தான் குறித்த பாடப்பகுதியை நீக்கிய கர்நாடக அரசு
திப்புசுல்தான் குறித்த பாடப்பகுதியை நீக்கிய கர்நாடக அரசு
Published on
Updated on
1 min read

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடப்பகுதியை கர்நாடக அரசு நீக்கியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் வழக்கமான வகுப்புகளும், தேர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை கணக்கில்கொண்டு பல்வேறு மாநில அரசுகளும் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்களின் தேர்விற்காக பாடப்பகுதிகளை குறைத்து வருகின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 7ஆம் வகுப்பு பாடப்பகுதியில் இருந்து மைசூரு பகுதியை ஆண்ட திப்புசுல்தான் மற்றும் அவரது தந்தை ஹைதர் அலியின் நிர்வாகம், ஆட்சிமுறை தொடர்பான பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கமளிக்கத்தில், “மாணவர்கள் 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் திப்புசுல்தான் குறித்து படிப்பதால் குறிப்பிட்ட பாடப்பகுதிகள் 7ஆம் வகுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பிலான தலைவர்கள் திப்புசுல்தானை ”கர்நாடக விரோதி, கொடூரக் கொலையாளி” என விமர்சனம் செய்திருந்த நிலையில் பள்ளிப் பாடப்பகுதியிலிருந்து திப்புசுல்தான் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிபிஎஸ்இ பாடப்பகுதியில் இருந்து மதச்சார்பின்மை உட்பட நீக்கப்பட்ட பாடப்பகுதிகள் குறித்து சர்ச்சை அடங்குவதற்குள் புதிய சர்ச்சை கிளம்பி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com