விஷம் கலந்த சப்பாத்தி சாப்பிட்ட நீதிபதி, மகன் மரணம்; மந்திரவாதி உள்பட 6 பேர் கைது

மத்தியப் பிரதேசத்தில் விஷம் கலந்த சப்பாத்தியை சாப்பிட்ட நீதிபதியும், அவரது மகனும் மரணம் அடைந்த வழக்கில் மந்திரவாதி மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷம் கலந்த சப்பாத்தி சாப்பிட்ட நீதிபதி, மகன் மரணம்; மந்திரவாதி உள்பட 6 பேர் கைது


மத்தியப் பிரதேசத்தில் விஷம் கலந்த சப்பாத்தியை சாப்பிட்ட நீதிபதியும், அவரது மகனும் மரணம் அடைந்த வழக்கில் மந்திரவாதி மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக இருந்த பீடல் மகேந்திர திரிபாதி மற்றும் அவரது 33 வயது மகன் ஆகியோர் இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு உணவு சாப்பிட்டதும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிறன்று மரணம் அடைந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணை கைது செய்தனர். அந்த பெண்தான், சப்பாத்தி செய்ய கோதுமை மாவை அந்த குடும்பத்துக்கு கொடுத்துள்ளார். அது பூஜை செய்த கோதுமை மாவு என்றும், அதனை சாப்பிட்டால் வீட்டில் நல்லது நடக்கும் என்று கூறி  கோதுமை மாவு கொடுத்துள்ளார்.

கடந்த ஜூலை 20-ம் தேதி நீதிபதி குடும்பத்தினர் அந்த கோதுமை மாவை வாங்கி வந்துள்ளனர். அன்றைய தினமே இரவு உணவாக சப்பாத்தி செய்துள்ளனர். நீதிபதியும், அவரது இரண்டு மகன்களும் சப்பாத்தி சாப்பிட்டுள்ளனர். மனைவி சாதம் சாப்பிட்டுள்ளார். இதில் நீதிபதியும், மூத்த மகனும் சாப்பிட்டதுமே வாந்தி எடுக்கத் தொடங்கினர். உடனடியான அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 23ல் அவர்களது உடல்நிலை மோசமடைந்தது.

ஜூலை 25ம் தேதி நீதிபதியும், அவரது மூத்த மகனும் மரணம் அடைந்தனர். இளைய மகனுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சையில் அவர் குணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிஹிந்வாரா பகுதியில் நீதிபதி பணியமர்த்தப்பட்டது முதல் அங்கு பழக்கமான சந்தியா சிங் என்ற பெண்மணிதான் நீதிபதி குடும்பத்தினரை கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பூஜை செய்த கோதுமையை நீதிபதிக்குக் கொடுப்பதாகவும், அதை சமைத்து சாப்பிட்டால் வீட்டில் இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று சந்தியா சிங் ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை திட்டத்தை வகுத்துக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மந்திரவாதி மற்றும் சந்தியா சிங்கின் ஓட்டுநர் உள்பட ஆறு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com