புது தில்லி: ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்வதாக அறிவித்திருந்த பிரியங்கா காந்தி, தில்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தங்கியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆனால், பங்களாவை காலி செய்ய கூடுதல் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்திருந்த பிரியங்கா, நான் அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி பங்களாவை காலி செய்கிறேன் என்று சுட்டுரை மூலம் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அவர் அரசு பங்களாவை காலி செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


