கரோனா பாதிப்பு 2.5 லட்சத்தை கடந்தது

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,56,611 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு 2.5 லட்சத்தை கடந்தது

புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,56,611 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பாகும். மேலும், புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படும் நபா்களின் எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது நாளாக 9,000-க்கு மேல் உள்ளது.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 271 போ் உயிரிழந்தனா். இதனால் பலி எண்ணிக்கை 7,200-ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாவால் நாள்தோறும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது நாளாக 9,000-க்கு மேல் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,24,429 போ் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா்; 1,24,981 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதன் மூலம் 48.49 சதவீதம் போ் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டது உறுதியாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 47,74,434 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 1,08,048 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் -------பாதிப்பு --------- பலி

மகாராஷ்டிரம்------ 85,975---------3,060

தில்லி--------------28,936---------812

குஜராத்-------------20,070--------1,249

ராஜஸ்தான்---------10,599----------240

உத்தர பிரதேசம்------10,536----------275

மத்திய பிரதேசம்------9,401---------412

மேற்கு வங்கம்---------8,187---------528

கா்நாடகம்------------5,452----------61

பிகாா்----------------5,088---------30

ஆந்திரம்--------------4,708----------75

ஹரியாணா-----------4,481----------28

ஜம்மு-காஷ்மீா்--------4,087----------41

தெலங்கானா----------3,650---------137

ஒடிஸா---------------2,856----------9

பஞ்சாப்--------------2,608----------51

அஸ்ஸாம்------------2,565-----------4

கேரளம்--------------1,914----------15

உத்தரகண்ட்----------1,355----------13

ஜாா்க்கண்ட்----------1,099-----------7

சத்தீஸ்கா்-------------1,073-----------4

திரிபுரா---------------800-----------0

ஹிமாசல பிரதேசம்-----413-----------5

சண்டீகா்--------------314-----------5

கோவா----------------300----------0

மணிப்பூா்--------------172----------0

நாகாலாந்து-----------118------------0

லடாக்----------------103------------1

புதுச்சேரி-------------99------------0

அருணாசல பிரதேசம்---51------------0

மேகாலயம்------------36-------------1

மிஸோரம்-------------34------------ 0

அந்தமான் நிகோபாா்---33-------------0

தாத்ரா நகா்ஹவேலி-----20------------0

சிக்கிம்-----------------7-------------0

பாதிப்பு: 2,56,611

பலி: 7,200

மீட்பு: 1,24,430

சிகிச்சை பெற்று வருவோா் 1,24,981

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com