மோட்டார் வாகனங்களின் அனைத்து ஆவணங்களுக்கும் செல்லுபடித் தேதி நீட்டிப்பு

நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களின் அனைத்து விதமான ஆவணங்களுக்குமான செல்லுபடித் தேதி நீட்டிக்கபப்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரி
நிதின் கட்காரி

புது தில்லி: நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களின் அனைத்து விதமான ஆவணங்களுக்குமான செல்லுபடித் தேதி நீட்டிக்கபப்டுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிதின் கட்கரி செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டு வரும் சிரமங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, மோட்டார் வாகனங்களின் அனைத்து விதமான ஆவணங்களும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியன்று துவங்கி காலாவதியாகக் கூடிய, நிலையிலுள்ள வாகனங்களின் உறுதித் தன்மைச் சான்றிதழ், எல்லா விதமான அனுமதிச் சான்றுகள், அனைத்து விதமான ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து விதமான ஆவணங்களின் செல்லுபடிக் காலம் ஜூன் ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று கடந்த மார்ச் 30-ஆம் தேதி முடிவு எடுக்கபட்டது. தற்போது அது மேலும் நீட்டிக்கப்படுகிறது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com