கரோனா இரட்டிப்பு விகிதம் 17.4 நாள்களாக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 17.4 நாள்களாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
கரோனா இரட்டிப்பு விகிதம் 17.4 நாள்களாக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 17.4 நாள்களாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று பிற்பகல் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 49.47% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,166 பேர் குணமடைந்துள்ளனர். 

இதுவரை மொத்தமாக 1,47,194 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,41,842 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 

அதேபோன்று கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 15.4 நாள்களாக இருந்த நிலையில் தற்போது 17.4 நாள்களாக அதிகரித்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 637 அரசு ஆய்வகங்கள், 240 தனியார் ஆய்வகங்கள் என மொத்தமாக 877 ஆய்வகங்கள் உள்ளதாக தெரிவித்தனர். 

முன்னதாக, நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,498 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com