
பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் இன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர, தற்கொலை செய்து கொண்டது திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக, விளையாட்டு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் மறைவு குறித்து இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
'சுஷாந்த் சிங் ராஜ்புத், ஒரு சிறந்த இளம் நடிகர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். திரையுலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது. அவர் மறக்கமுடியாத பல தருணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்' என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.