
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஒரே வீட்டில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள வத்வா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, இரண்டு சகோதரர்கள், அவர்களின் நான்கு குழந்தைகள் என மொத்தம் ஆறு பேரின் உடல்கள் வெள்ளியன்று மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்தப் பகுதி காவல் ஆய்வாளர் கோஹில், ‘எதிர்பாராமல் நேர்ந்த விபத்து என்ற இந்த மரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.