
மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அங்கு புதிதாக 3,890 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 208 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,42,900 ஆகவும், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 6,739 ஆகவும் உயர்ந்துள்ளன.
இன்று 4,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 73,792 பேர் நோய்த் தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர். அங்கு குணமடைவோர் விகிதம் 51.64% ஆக உள்ளது.
தாராவி:
மும்பையில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இன்று புதிதாக 10 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,199 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,100 பேர் குணமடைந்துள்ளனர், 81 பேர் பலியாகியுள்ளனர்.1,018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.