நாளை முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம்

சுமார் மூன்று மாத காலத்துக்குப் பின் புது தில்லியில் உள்ள அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ஜூன் 25-ம் தேதி முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட உள்ளது.
நாளை முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு
நாளை முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு


புது தில்லி: சுமார் மூன்று மாத காலத்துக்குப் பின் புது தில்லியில் உள்ள அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ஜூன் 25-ம் தேதி முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட உள்ளது.

ஒரு நாளைக்கு 15 நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் இது குறித்து முடிவெடுத்துள்ளார். அதன்படி, ஜூன் 25 முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் என்றும், ஏற்கனவே சிகிச்சை பெற்ற நோயாளிகள் மட்டும் நாள் ஒன்றுக்கு 15 பேர் என அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காலத்தில் காணொலி காட்சி வாயிலாகவே புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுவரை சுமார் 61 நோயாளிகள் இந்த முறையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com