ஒத்துழையுங்கள் இல்லையென்றால் பொது முடக்கம்தான்: பெங்களூருவாசிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை

பெங்களூருவில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருக்க  வேண்டுமென்றால், கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழையுங்கள் என்று பெங்களூருவாசிகளுக்கு மாநில முதல்வர் எடியூரப்பா..
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: பெங்களூருவில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருக்க  வேண்டுமென்றால், கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழையுங்கள் என்று பெங்களூருவாசிகளுக்கு மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெங்களூருவில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டாம் என்றால், அரசு எடுக்கும் முயசிகளுக்கு ஒத்துழைப்பு தந்து சமூக இடைவெளியைப் பேணுவதே நல்லது.

கரோனா தொற்று அதிகமாகும் வேலையில், நாங்கள் தீவிர முயற்சி எடுத்து சில பகுதிகளை முடக்கியுள்ளோம். வியாழனன்று மதியம் கிருஷ்ணாவில் உள்ள எனது இல்ல அலுவகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

அதேபோல் இந்த விவகாரத்தில் எடுக்க உள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி, நாளை அனைத்துக் கட்சிக் கூடம் ஒன்றும் நடைபெற உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பெங்களூரு சிறப்பாகவே உள்ளது; அத்துடன் மற்ற பகுதிகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com