'ஃபேர் அண்ட் லவ்லி' பெயரை மாற்றுகிறது யூனிலிவர்; இனி ஃபேர் கிடையாது

மிகப் புகழ்பெற்றதுமான ஃபேர் அண்ட் லவ்லி பெயரை மாற்ற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஃபேர் அண்ட் லவ்லியில் இனி ஃபேர் இருக்காது.
'ஃபேர் அண்ட் லவ்லி' பெயரை மாற்றுகிறது யூனிலிவர்
'ஃபேர் அண்ட் லவ்லி' பெயரை மாற்றுகிறது யூனிலிவர்


அழகுக்கு பயன்படுத்தும் க்ரீம்களில் முன்னோடி என்றும், மிகப் புகழ்பெற்றதுமான ஃபேர் அண்ட் லவ்லி பெயரை மாற்ற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஃபேர் அண்ட் லவ்லியில் இனி ஃபேர் இருக்காது.

அழகு என்றால் வெள்ளையாக இருப்பது என்பது போல அர்த்தப்படும் ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை அதன் தயாரிப்புப் பொருட்களில் இருந்து நீக்க யூனிலிவர் முடிவு செய்துள்ளதே இதற்குக் காரணம்.

சிறு வயது முதலே ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைப் பார்த்திருப்பவர்களுக்குத் தெரியும் - ஒரு கருப்பான பெண்மணி அவள் நிறம் குறித்து தொடர்ச்சியான விமரிசனங்களை எதிர்கொள்வார் - இதை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது 2020, ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ஒரு கொள்கையை எடுத்துள்ளது. அழகு என்பதில் அனைத்தையும் உள்ளடக்கியதாக தங்களது பார்வையை மாற்றுகிறது. இதுவரை ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளே அழகு என்று அடையாளப்படுத்தப்பட்டது தவறு என்று தாங்கள் கருதுவதாகக் கூறியுள்ளது.

தங்களது அழகுக் கிரீம் அனைத்து வகையான சருமங்களையும் கொண்டாடுகிறது. ஏற்கனவே 2019ல்  ஃபேர் அண்ட் லவ்லி க்ரீமில் இருந்து கருப்பான மற்றும் வெள்ளை நிறம் என இரண்டு முகங்களை நீக்கிவிட்டோம். வெள்ளையான சருமம் என்பதை விட, மிக ஆரோக்கியமான சருமம் என்பதை இணைத்துள்ளோம் என்று ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிர்வாகி சஞ்சீவ் மேத்தா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com