நாற்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த 93 வயது மூதாட்டி!

நாற்பது வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 93 வயது மூதாட்டி ஒருவர் வாட்ஸ் அப் உதவியுடன் மகாராஷ்டிராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார். 
40 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த 93 வயது பாட்டி
40 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த 93 வயது பாட்டி

நாற்பது வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 93 வயது மூதாட்டி ஒருவர் வாட்ஸ் அப் உதவியுடன் மகாராஷ்டிராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார். 

இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் நாக்பூரில் உள்ள தனது பேரனின் வீட்டிற்கு 93 வயதான பஞ்சுபாய் பாட்டி எப்படி இணைந்தார் என்ற கதையை டிவிட்டரில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. 

1979-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் தேனீக்கள் தீண்டிய நிலையில், சாலையில் நடந்துவந்த பெண்ணை காப்பாற்றி டிரக் டிரைவர் காண் என்பவர் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மனநிலை சரியில்லாமல் மராத்தியில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அது எங்களுக்குப் புரியவில்லை. 

பின்னர் மூதாட்டியை எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றோம். அவர் எங்களுடன் வாழத் தொடங்கினார். அவரை "அச்சான் மொளசி" என்று அழைத்தோம். காண் முகநூலில் மூதாட்டியை பற்றி எழுதினார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கஞ்ச்மா நகர் என்ற இடத்தைப் பற்றி மூதாட்டி அடிக்கடி பேசுவார் தவிர வேறு எதுவும் பேசமாட்டார். கூகுள் மூலம் அந்த பெயரைத் தேடியும் கிடைக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரித்தும் பலன் இல்லை. 

பின்னர், கடந்த மே 4-ம் தேதி ஊரடங்கால் வீட்டிலிருந்தபோது மீண்டும் அவருடைய சொந்த ஊரைப் பற்றிக் கேட்கையில், பரஸ்பூர் என்ற இடத்தைச் சொன்னார். மீண்டும் கூகுளில் தேடும் போது மகாராஷ்டிராவில் பரஸ்பூர் என்ற இடம் இருப்பதைக் கண்டோம். உடனே, அங்குச் சென்று விசாரித்தோம். அங்குள்ள கிரார் சமூகத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் ஊருக்கு அருகில் கஞ்ச்மா நகர் என்ற கிராமம் இருப்பதாகக் கூறினார். 

மேலும், மூதாட்டியை விடியோவாக தயாரித்து, கிரார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தோம். பின்னர் பஞ்சுபாயின் பேரன் ஷிங்கானே என்பவர் பாட்டியின் விடியோவை கண்டு அதிர்ந்து தொலைபேசியில் தொடர்புகொண்டார். பின்னர், விவரம் அறிந்து தனது பாட்டியை வீட்டிற்கு அழைத்துவர ஆர்வம் கொண்டார். 

ஜூன் 17ம் தேதியன்று, ஷிங்கனே தனது பாட்டி பஞ்ச்புலாபாய் தேஜ்பால்சிங் ஷிங்கானை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக, அவளால் தன் மகனைச் சந்திக்க முடியவில்லை, அவர் 2017-ல் இறந்துவிட்டார்.

நாங்கள், மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள அச்சல்பூர் தாலுக்காவில் உள்ள கஞ்ச்மா நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1979-ல் என் தந்தை என் பாட்டியை கஞ்ச்மா நகரில் மனநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக நாக்பூருக்கு அழைத்து வந்தார். ஆனால், அவர் ஒருநாள் வீட்டியிலிருந்து காணாமல் சென்றுவிட்டார். 

என் தந்தை பல ஆண்டுகளாக அவரைத் தேடினார், பின்னர் ஒரு கட்டத்தில் தேடுவதை நிறுத்திவிட்டார். என் பாட்டியை நீண்ட காலமாகக் கவனித்து வந்த காண் குடும்பத்தினரால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அவரது பேரன் கூறினார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com