
மும்பை தாராவிப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த சில நாள்களாக நோய்ப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 15-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.
இன்றைய நிலவரப்படி அங்கு புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,245 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.