கொச்சி: கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஜிலுமோல் மேரியட் தாமஸ் (28). இவர் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர்.
நாள்தோறும் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதே கடினமான விஷயமாக இருக்கும் ஜிலுமோல் பிறக்கும் போது வேண்டுமானால் பலரது பரிதாபப் பார்வைக்கும் ஆளாகியிருக்கலாம். ஆனால் இன்று அவர் பலரும் வியந்து பேசும் லட்சியப் பெண்ணாகியுள்ளார்.
ஆம், கைகள் இல்லாத நிலையில், கால்களால் கார் ஓட்டிப் பழகி பலருக்கும் முன்மாதிரியாகியுள்ளார்.
கார் ஓட்டுவது என்பது இவருக்கு வாழ்நாள் கனவாம். தனக்குப் பிடித்த சாலைகளில் எல்லாம் இவர் தனியாக வாகனத்தை இயக்கி மகிழ்ந்து வருகிறார்.
பயத்தை விட்டொழித்தால் எதையும் சாதிக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த தைரியத்தோடுதான் கால்களால் கார் ஓட்டிப் பழகினேன். ஓட்டுநர் உரிமத்துக்காக மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்ற போது, அங்கே ஒரு சவால் காத்திருந்தது.
இந்தியாவில் என்னைப் போன்று கால்களால் கார் ஓட்டி யாரேனும் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், அதன் நகலை இணைக்குமாறு சொன்னார்கள். இந்தியா முழுக்க தேடியதில், விக்ரம் அக்னிஹோத்ரி என்பவர் கால்களால் கார் ஓட்டி உரிமம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
2018ம் ஆண்டு ஜிலுமோல் சொந்தமாகக் கார் வாங்கி, அதனை தனக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டார். எனது குடும்பத்தில் யாருக்குமே கார் ஓட்டத் தெரியாது. நானே எனது சொந்த முயற்சியில் கார் ஓட்டப் பழகினேன். தற்போது ஒரு பிரிட்ண்டிங் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனராகவும் பணியாற்றுகிறார் ஜிலுமோல்.
நான் என் சொந்த சம்பாத்தியத்தில்தான் கார் வாங்கினேன். கார் ஓட்டுவதற்கு முன்பு எனது பெற்றோரை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தேன். தற்போது வரை இவரது வாகனத்துக்கு பதிவு பெறவில்லை. ஓட்டுநர் உரிமமும் கிடைக்கவில்லை. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கிவிட்டது. மாநில அரசும் இது குறித்து பரிசீலித்து வருகிறது. எனது கனவை நனவாக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று அதே தன்னம்பிக்கையோடு பேசுகிறார் ஜிலுமோல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.