கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கு சிறைத் தண்டனை

பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றதற்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கு சிறைத் தண்டனை
Published on
Updated on
1 min read

லக்னௌ: பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றதற்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

25 வயது புதுமணப் பெண், தனது கனவிலும் இதுபோன்ற நிலை வரும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இத்தாலிக்கு தேனிலவைக் கொண்டாடச் சென்றதன் பயனாக, கணவருக்கு கரோனா பாதித்து, கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற தனக்கும் கரோனா பாதித்து, தற்போது சிறைத் தண்டனைக்கும் ஆளாகியிருக்கிறார்.

மருத்துவ அவசர நிலையை கருத்தில் கொள்ளாமல், கட்டுப்பாடுகளைத் தாண்டி தப்பிச் சென்று பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைந்த குற்றத்துக்காக, அவரைக் கைது செய்து சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூகுள் ஊழியரை திருமணம் செய்து கொண்டு, இத்தாலி நாட்டுக்கு இருவரும் தேனிலவைக் கொண்டாடச் சென்ற நிலையில், அங்கிருந்து இந்தியா திரும்பியதும், இருவரும் கரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில் அப்பெண்ணின் கணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்பெண் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருந்து மார்ச் 8ம் தேதி  யாருக்கும் சொல்லாமல் வெளியேறி, பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புது தில்லி சென்று தனது பெற்றோருடன் ரயில் மூலம் ஆக்ரா சென்றுள்ளார்.

அது மட்டுமல்ல, அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை மருத்துவக் குழுவினர் அழைத்து வரச் சென்றபோது, அவர் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் இருந்துள்ளார். அங்கிருந்து வர அவர் மறுத்த நிலையில், மாவட்ட நீதிபதி தலையிட்டு, காவல்துறையின் உதவியோடுதான் அப்பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் அவருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மும்பையைச் சோ்ந்த 26 வயதுள்ள ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதை கா்நாடக சுகாதாரத் துறை நேற்று உறுதிப்படுத்தியது. கிரீஸ் நாட்டில் தேனிலவைக் கொண்டாடிவிட்டு பெங்களூருக்கு வந்தவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவரது மனைவி தற்போது கரோனா வைரஸ் பாதித்து, சிறைத் தண்டனைக்கும் ஆளாக நேரிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com