

மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக செவ்வாய்கிழமை பேட்டியளித்த ரஞ்சன் கோகோய் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறேன், அதன்பிறகு ஊடகங்களிடம் விரிவாக பேசுகிறேன் என்றார்.
இந்நிலையில், இவர் நாளை காலை 11 மணிக்கு மாநிலளங்களவை நியமன உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பணியாற்றிய ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். பாபர் மசூதி நில விவகாரம், ரஃபேல், சபரிமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் இவரது தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.