
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தயார் நிலையில் திகார் சிறை நிர்வாகம் உள்ளது.
தில்லியில் கடந்த 2012-இல் துணை மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை மார்ச் 20 அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, நால்வரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்படவுள்ளனர். இதற்கான தயார் நிலையில் சிறை நிர்வாகம் உள்ளது. குற்றவாளிகள் நால்வரும் தூக்கு மேடையை வந்தடைந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.