நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு

பிரதமர் மோடி அறிவிப்பைத்தொடர்ந்து நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடி அறிவிப்பைத்தொடர்ந்து நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு கடந்த 19-ஆம் தேதி உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் வலியுறுத்தினாா்.

எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும் மக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். அதேபோல், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்தநிலையில் சுய ஊரடங்கையடுத்து  நாடு முழுவதும் மால்கள், சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரயில், போக்குவரத்து, விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை. 

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. இதேபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய பகுதியிலும், உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலை உள்ளது. கேரள மாநிலத்திலும் திருவனந்தபுரம் மத்திய பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலை உள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர். காஷ்மீரில் தோடா என்ற இடத்தில் பொதுமக்கள் யாரும் நடமாடவில்லை. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், அஸ்ஸாமின் குவாஹாத்தி, திரிபுராவின் அகர்தலா, மணிப்பூர் தலைநகர் இம்பால், மேகாலயா மாநிலம் ஷில்லாங், பீகார் மாநிலம் பாட்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சாலைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியன மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் பிரமதான சாலைகள் வெறிச்சோடியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com