பஞ்சாப், சண்டீகரில் காற்றின் தரக் குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது

பஞ்சாப் மற்றும் சண்டீகரில் காற்றின் தரக் குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக குறைந்துள்ளது.
பஞ்சாப், சண்டீகரில் காற்றின் தரக் குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மற்றும் சண்டீகரில் காற்றின் தரக் குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக குறைந்துள்ளது.

கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக வாகனங்களின் பெருக்கத்தால் பஞ்சாப், சண்டீகர், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அதிகமாக இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகக்கூட மேற்குறிப்பிட்ட பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் காற்றின் தரக்குறியீடு மிகவும் குறைந்துள்ளது. அதாவது காற்றின் தரம் உயர்ந்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் 101 நகரங்களில் காற்று மாசுபாடு இருந்த நிலையில், தற்போது 17 நகரங்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாகவே அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.

சாலைகளில் வாகனங்கள் இல்லாததால் காட்டு விலங்குகள் சாலையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

அதன்படி, பல்வேறு நகரங்களின் காற்று தரக்குறியீடு(AQI) பின்வருமாறு:

அமிர்தசரஸ்:63, லூதியானா:27, மண்டி கோபிந்த்கர்க்:28, பாட்டியாலா: 25,  ஜலந்தர்: 32,  கன்னா: 29.

கடந்த ஆண்டு மார்ச் 29 அன்று  காற்று தரக்குறியீடு:

அமிர்தசரஸ்:139, லூதியானா:67, மண்டி கோபிந்த்கர்:183, பாட்டியாலா: 158,  ஜலந்தர்: 163 மற்றும் கன்னா: 93.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com