கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா உறுதி: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 
கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா உறுதி: மத்திய சுகாதாரத் துறை
Updated on
1 min read

கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல்  செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,993 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 564 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 35,043 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 1,147 ஆக உள்ளது. கரோனா மீட்பு விகிதம் 25.37% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 8,888 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா இரட்டிப்பு விகிதமாகும் கால அளவு 11 நாள்களாக உள்ளது. இறப்பு விகிதம் 3.2% ஆக உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com