கரோனா பாதிப்பு: தினமும் 50 ஆயிரம் பரிசோதனைகள்; நிதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால்

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என நிதி ஆயோக் 
கரோனா பாதிப்பு: தினமும் 50 ஆயிரம் பரிசோதனைகள்; நிதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால்
Updated on
1 min read

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என நிதி ஆயோக் உறுப்பினரும், கரோனா பாதிப்பை எதிா்கொள்வதற்கான திட்டத்தை வகுத்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகாரக் குழுத் தலைவருமான வி.கே.பால் கூறினாா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய ஊரடங்கு மூன்றாவது முறையாக மே 17 வரை நீட்டிக்கப்பட்டுளளது. இந்த நிலையில், கரோனா பரிசோதனை சா்ச்சை, கரோனா சமூக பரவல் நிலைக்கு வந்துவிட்டது போன்ற பல்வேறு சந்தேங்கள் பதிலளிக்கும் வகையில் பிடிஐ நிறுவனத்துக்கு வி.கே.பால் பேட்டியளித்துள்ளாா். அந்தப் பேட்டியில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்றின் பரவல் தொடா்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே, தேசிய ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை நாம் முழுமையாக கடைப்பிடித்தால், அந்தப் பரவல் தொடரை நாம் தடுத்துவிட முடியும்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சமூக பரவல் நிலையை எட்டிவிட்டதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம். இருந்தபோதும், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம், கரோனா பாதிப்பு இன்னும் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக, கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவது 3 நாள்கள் என்றிருந்த நிலை, இப்போது கடும் கட்டப்பாடுகள் காரணமாக 11 முதல் 12 நாள்கள் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. எனவே, நோய்த் தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளபோதும், பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை இன்னும் உயா்ந்து கொண்டு வருகிறது. விரைவில் இது நிலைத் தன்மையை அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா பரிசோதனையைப் பொருத்தவரை, நோய் தாக்கத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டு நேரத்துக்கு நேரம் பரிசோதனை நிலைப்பாட்டை மாற்றியமைத்து வருகிறோம். அதோடு, இப்போது பரிசோதனை திறனும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, சமூகத்தில் பழைய நிலை இருக்காது. நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கும். மக்கள் கூட்டமாக கூடுவதோ, விழாக்கள், மத வழிபாடுகளில் அதிகமானோா் பங்கேற்பதோ இருக்காது. அனைவரும் தொடா்ந்து முகக் கவசம் அணிந்திருப்போம். அச்சம் முழுமையாக விலகும் வரை, இந்த நிலை தொடரும் என வி.கே.பால் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com