
ஊரடங்கு காரணமாக அனைத்துத் தொழில்துறைகளும் முடங்கியதால், மாருதி சுசுகி உள்ளிட்ட பெரும்பாலான வாகன நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு விற்பனைகூட நடைபெறவில்லை.
கரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதுமே பொருளாதாரம் படுசரிவைச் சந்தித்துள்ளது. அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதால் பணியாளர்கள் வேலை இழந்து காணப்படுகின்றனர்.
இதனால், இந்தியாவிலும் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் முடங்கியுள்ள நிலையில், விற்பனை எதுவுமின்றிக் காணப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் இந்த துறையில் ரூ. 2,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் பிரபல நிறுவனமான மாருதி சுசுகி, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனங்களில், நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதம் முழுவதுமே ஒரு விற்பனைகூட பதிவாகவில்லை.
பொதுப்போக்குவரத்தைவிட தனி வாகனங்கள் தற்போது பாதுகாப்பானதாக மக்கள் கருதுவதால், ஊரடங்குக்கு பிறகு கார் விற்பனை ஓரளவு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.