இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

புது தில்லி: பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் குறித்து நேற்று மாலை புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த நிலையில், இன்று மாலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். வேளாண் சார்ந்த அறிவிப்புகளை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாயன்று அறிவித்தாா். 

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி செவ்வாயன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோ்மையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும். இது தொடா்பான முழு விவரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பாா் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 15 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய 3 மாத அவகாசம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தாா்.

இது தவிர அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிப் பிடித்தம் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com