தில்லியில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்த ராகுல்: ஊர் செல்ல வாகன ஏற்பாடு

தில்லியில் வீடு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
தில்லியில் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்த ராகுல்: ஊர் செல்ல வாகன ஏற்பாடு


தில்லியில் வீடு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கும், மாநிலத்துக்கும் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தில்லி சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே இருந்த புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களது பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அந்தத் தொழிலாளர்கள் வீடு செல்ல காங்கிரஸ் நிர்வாகிகளால் வாகன வசதி ஏற்படுத்தித் தரப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு தொழிலாளர், தான் ஹரியாணாவிலிருந்து வருவதாகவும், ஜான்ஸிக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு காரணமாக காவல் துறையினரால் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், காவல் துறையினர் தரப்பிலிருந்து இதற்கு உடனடியாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com