7 காவலர்களுக்கு கரோனா: தில்லி காவல் கட்டுப்பாட்டு அறை மூடல்

தில்லி காவல்துறையின் வயர்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்குக் கட்டுப்பாட்டு அறை மூடப்படுகிறது என்று தில்லி காவல்துறை..
7 காவலர்களுக்கு கரோனா: தில்லி காவல் கட்டுப்பாட்டு அறை மூடல்

புது தில்லி: தில்லி காவல்துறையின் வயர்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்குக் கட்டுப்பாட்டு அறை மூடப்படுகிறது என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

தில்லியின் மேற்கு மாவட்டத்தில் உள்ள வயர்லெஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அலுவலகத்தில் பணியாற்றும் 30 ஊழியர்கள் தற்போது வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து கட்டுப்பாட்டு அறை அடுத்த ஐந்து நாள்களுக்கு மூடப்படும் என்று தில்லி காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, 

இந்தியாவில் மொத்த பாதிப்பு 1,18,447 ஆக உள்ளது. இவற்றில் 66,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு  3,583 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,088 புதிய வழக்குகள் மற்றும் 148 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com