சிறப்பு ரயில்களை இயக்க மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்: பியூஷ் கோயல்

​புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ரயில்வேவுக்கு ஒத்துழைப்பு தந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதை மாநிலங்களுக்கு மீண்டும் வலியுறுத்துகிறேன்."

இன்று வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com