"பிரதமர் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?"

பிரதமர் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
"பிரதமர் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?"
Updated on
1 min read


பிரதமர் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

காணொலிக் காட்சி வாயிலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

"பிரதமரிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது. பிரதமர் நிதியிலிருந்து (பிஎம்-கேர்ஸ்) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? இந்தக் கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். 

இந்த காலகட்டத்தில் நிறைய மக்கள் பலியாகியுள்ளனர். சிலர் நடந்துபோகும் வழியில் பலியாகினர், சிலர் ரயிலிலும், சிலர் பசியிலும் பலியாகினர். இந்த நெருக்கடி காலத்தில் பலியானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா?

வரும் நாள்களில் நமது பொருளாதாரம் எதிர்மறையாக இருக்கப்போகிறது. நமது நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் நிலை என்ன? நாம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டியுள்ளது.

இதனால்தான் கடந்த 6 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளைத் தள்ளிவைத்து, ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கென திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டு வருகிறோம்."  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com