மிசோரம் வழியாகச் செல்லும் சிறப்பு ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருள்களை வழங்கிச் செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் இருந்து மிசோரம் வழியாக சென்ற ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று சென்றது. அது அசாம் வழியாகச் செல்லும்போது ரயில் பாதையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருந்தனர்.
உடனடியாக ரயில் சென்று கொண்டிருக்கும்போதே ரயிலினுள் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு பொட்டலங்களை ஜன்னல் வழியாக வீசினர். இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டனர்.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த விடியோவை மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.