ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பிகாரில் நாளை(நவ.3) 2ம் கட்டத் தேர்தல் : தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

பிகாரில் நாளை(நவம்பர் 3) இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

மின்னணு இயந்திரங்களை கொண்டு செல்லும் துணை ராணுவப் படை வீரர்கள்

Updated On :2 நவம்பர் 2020, 11:40 am

பிகாரில் நாளை(நவம்பர் 3) இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 71 சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை (நவம்பர் 3) 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது.

17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக ஈ.வி.எம், வி.வி.பி.ஏ.டி மற்றும் பிற இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நவம்பர் 3ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 4 மணியளவில் முடிவடையும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்கள் உள்பட அனைத்து உபகரணங்களும் துணை ராணுவப் படையின் கண்காணிப்பில் வைக்கப்படும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத் தலைமையகத்திற்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு, நவம்பர் 10ஆம் தேதி மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மூன்றாம் கட்டத்தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 53.54 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.