சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கடந்த 24 மணி நேரத்தில் 12,09,425 மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர் தகவல் 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,09,425  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2020, 5:50 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,09,425  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆா் வெளியிட்ட தகவில், மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் செயல்படுத்திய நடவடிக்கைகள் வலிய மேற்கொண்ட பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக, கரோனா நோய்த்தொற்றுள்ளோரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவியது. நன்கு செயல்படுத்தப்பட்ட, திறமையான மருத்துவ மேலாண்மை, தரமான கவனிப்பு நெறிமுறையின் மூலம் மிதமான மற்றும் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளிடையே அதிக மீட்பு விகிதத்தை உறுதி செய்துள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 50,210 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 83,64,086-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 55,331 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 77,11,809-ஆக அதிகரித்தது. மீட்பு விகிதம் தற்போது 92.20 ஆக அதிகரித்துள்ளது.  

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 704 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக அதிகரித்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7 ஆவது நாளாக 6 லட்சத்துக்குகீழ் உள்ளது. நாடு முழுவதும் 5,27,962 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 6.31 சதவீதமாகும். 

நாட்டின் பரிசோதனை உள்கட்டமைப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்த சோதனை உத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களையும் பரிசோதனைக்கு பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நவம்பர் 3 -ஆம் தேதி வரை 11 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 384 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 12,09,425 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 1262 ஆய்வகங்களில் கரோனா தொற்று மாதிரி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன, அவற்றில்  அரசுத்துறை ஆய்வகங்கள் 889, 373 தனியார் ஆய்வகங்கள் ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.