பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடர்ந்து முன்னிலை

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி 138 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 
கொண்டாட்டத்தில் பாஜகவினர்
கொண்டாட்டத்தில் பாஜகவினர்
Updated on
1 min read

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி 123 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

பிகாா் சட்டப் பேரவையில் 243 இடங்களுக்கான தோ்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி(ஐக்கிய ஜனதா தளம்-பாஜக) 123 இடங்களிலும், மகா கூட்டணி (ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ்) 111 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

பிற்பகல் 4 மணி நிலவரப்படி, 42% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் இடைவெளி அதிகரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்துள்ளன. இதனால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com