பிகார் தேர்தல்: முன்னேறுகிறது பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி

பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த நிலையில், தற்போது பெரும்பான்மையை நோக்கி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னேறியுள்ளது.
பிகார் தேர்தல்: முன்னேறுகிறது பாஜக கூட்டணி
பிகார் தேர்தல்: முன்னேறுகிறது பாஜக கூட்டணி
Updated on
1 min read


பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த நிலையில், தற்போது பெரும்பான்மையை நோக்கி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னேறியுள்ளது.

இதுவரை இரண்டு கூட்டணிகளுமே 110 என்ற இடங்களிலேயே ஓரிரு தொகுதிகள் முன்னும் பின்னுமாக முன்னிலை வகித்து வந்த நிலையில், 11 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னிலை நிலவரம் 

கட்சிகள்முன்னிலைவெற்றிமொத்தம்
பாஜக - ஐக்கிய ஜனதா தளம்13100131
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம்10000100
லோக் ஜன சக்தி060006
பிற வேட்பாளர்கள்060006


பிகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெறத்தொடங்கியது முதல் இதுவரை இழுபறி நீடிக்கும் என்று கருதிய நிலையில், ஒரு பெரிய மாற்றமாக, பாஜக 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பிகாரில் பெரும்பான்மையோடு பாஜக ஆட்சியமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com