பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முழு முடிவுகளும் வெளியாக தாமதமாகும் என்று மாநில தேர்தல் அதிகாரி ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். இதுவரை பதிவான 4.10 கோடி வாக்குகளில் இதுவரை வெறும் 92 லட்சம் வாக்குகளே எண்ணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் இடைவெளி அதிகரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்துள்ளன. இதனால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னிலை நிலவரம் 

கட்சிகள்முன்னிலைவெற்றிமொத்தம்
பாஜக - ஐக்கிய ஜனதா தளம்12800128
காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம்10400104
லோக் ஜன சக்தி020002
பிற வேட்பாளர்கள்090009


பல தொகுதிகளில் இன்னும் 35 சுற்றுகள் வரை எண்ணப்பட உள்ளது. பல சுற்று முடிவுகள் வெளியாகாததால், எதிர்க்கட்சிகள் வெற்றி வாய்ப்பை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதேவேளையில், பிகாரில் 80 தொகுதிகளில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே வெறும் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலேயே இழுபறி நீடிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com