
தேர்தல் முடிந்த பிறகும் மற்ற கட்சிகள் அரசியல் செய்வதாக மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
தாணே மாவட்டத்தில் நடைபெற்ற ரயில்வே மேம்பாலத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது:
"எங்களைப் பொறுத்தவரை தேர்தலுக்குத்தான் அரசியல். தேர்தல் முடிந்துவிட்டால், நாங்கள் எங்களது பணியைச் செய்யத் தொடங்கிவிடுவோம். ஆனால், மற்றவர்கள் எப்போதும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் செய்யட்டும்.
இந்தத் திட்டம் பல்வேறு தடங்கள்களைச் சந்தித்தது. இதேபோல் தடங்கள்களைச் சந்தித்த மற்ற திட்டங்களும் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அரசால் செயல்படுத்தப்படும்."
கல்யான் எம்.பி. ஸ்ரீகாந்த் தெரிவிக்கையில், இந்தப் பாலம் 30 நாள்களுக்குப் பிறகு போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.